AmalAutomation
English
நிலா நலம்Nila Nalam

அத்தியாயம் 11

கற்றவைகளும் வெற்றிக் கதைகளும்

நிலா நலத்திலிருந்து நான் கற்றது மிக அதிகம். அதிலிருந்து நான் ஒரு வார விரதம் முறையை உருவாக்கிக் கொண்டேன். இதனை மிக எளிதாக பயிற்சி செய்யலாம்.

ஒரு வார விரதம்

ஒரு வார விரதம் சனிக்கிழமை ஆரம்பிக்க வேண்டும். காலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கவும். பாதி அளவு சாப்பாடு எடுத்துக்கொண்டு மாலையில் காய்ந்த திராட்சை ஊறவைத்து அரைத்து சாறு குடிக்க வேண்டும். ஒரு 50 கிராம் காய்ந்த திராட்சை 8 மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு அதை நன்றாக அரைத்த சாற்றை மாலை 7 மணிக்குள் குடிக்க வேண்டும். அது குடலில் உள்ள மலத்தை இலகுவாக்கும். மறுநாள் காலையில் நீங்கள் வயிற்றை உப்பு நீரால் சுத்தம் செய்யும் பொழுது எளிதாக சுத்தமடையும். ஞாயிறு அன்று வயிற்றை சுத்தம் செய்துவிட்டு முழு ஓய்வு எடுத்துக் கொள்ளவும்.

dia-week.png

திங்கள் கிழமை தேன் விரதமும் செவ்வாய்க்கிழமை நீர் விரதமும் புதன்கிழமை உலர் விரதமும் வியாழக்கிழமை நீர் விரதமும் வெள்ளிக்கிழமை தேன் விரதமும் சனிக்கிழமை காலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கவும். அரை உணவும் எடுத்துக் கொள்ள வேண்டும். இது சுழற்சி முறை அல்ல. இது ஒரு பயிற்சி. விரைவாக விரதம் இருப்பவர்களுக்கு இது பயன்படும். சுழற்சி முறையில் செய்ய வேண்டும் என்றால் மாத சுழற்சி முறையை பின்பற்றவும். இந்த விரைவான பயிற்சி முறையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை செய்யலாம். 

நாள்அன்றைய முறைகுறிப்பு

சனி

அரை உணவு

காலையில் எண்ணெய்க் குளியல். மாலை 7 மணிக்குள் 50 கி. உலர் திராட்சை (8 மணி நேரம் ஊறவைத்து அரைத்த) சாறு.

ஞாயிறு

வயிற்றுச் சுத்திகரிப்பு

காலையில் உப்பு நீரால் வயிற்றைச் சுத்தம் செய்து, நாள் முழுவதும் முழு ஓய்வு.

திங்கள்

தேன் விரதம்

40 கி. தேன், 1–2 மணி நேர இடைவெளியில்.

செவ்வாய்

நீர் விரதம்

நீர் மட்டும்.

புதன்

உலர் விரதம்

உணவும் இல்லை, நீரும் இல்லை. பயிற்சியின் மையம்.

வியாழன்

நீர் விரதம்

நீர் மட்டும்.

வெள்ளி

தேன் விரதம்

40 கி. தேன்.

சனி

அரை உணவு

காலையில் எண்ணெய்க் குளியல். விரதம் நிறைவு.

இந்த முறையில் படிப்படியாக உணவைக் குறைத்து பாதி உணவு, பிறகு கால் உணவு, திங்கள் கிழமை தேன் மற்றும் பிறகு நீர் மட்டும் பிறகு உலர் விரதமும் இருப்பதால் உங்களுக்கு அதிகம் சோர்வு ஏற்படாது. விரத நாட்களில் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

வெற்றிக் கதைகள்

ஒரு முறை பலனளித்தது என்பதை நிரூபிப்பது அதைப் பின்பற்றியவர்களின் அனுபவமே. இந்த அத்தியாயம் அவர்களுக்கானது.

என் கதை

எனது அம்மாவுக்கு 2008 இல் அவரது 60 களின் வயதில் மருத்துவ சோதனை செய்யும் பொழுது அவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது கண்டறிந்தோம். அவர் நீரிழிவுக்கான மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருகிறார். அதனால் எனக்கும் சோதனை செய்யலாம் என்று சோதனை செய்த பொழுது 2010ல் எனது 30 களின் வயதில் எனக்கும் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. அதிலிருந்து நானும் மாத்திரைகளை சுமார் 15 வருடங்களுக்கு மேலாக எடுத்துக் கொண்டு வருகிறேன். நான் சிறுவயது முதல் மிக அதிகமாக மூன்று வேளையும் அரிசி உணவு உண்பவன். ஆனால் இப்பொழுது மிக குறைவாக அரிசி உணவு உண்கிறேன்.

ஒவ்வொரு முறை மருத்துவரிடம் சென்று குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு தடவை சோதனை செய்யும் பொழுது என் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சோதனை செய்து கொண்டிருக்கிறேன். இதை தவிர நானும் தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் எனது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அளந்து வருகிறேன். இதனால் நான் அன்றைய தினத்திற்கான உணவை திட்டமிட முடியும். காலையில் இரத்தத்தின் அளவு அதிகமாக இருந்தால் அன்று காலை இரண்டு தோசைக்கு பதிலாக ஒரு தோசை. மதிய சாப்பாட்டின் அளவு குறைவு. இரவில் பழங்கள் என்று முடித்துக் கொள்கிறேன். இதனால் எனது ஒரு நாளுக்கான உணவை திட்டமிடப்படுகிறது. கடினமாக இருந்தாலும் இப்பொழுது இது எனக்கு நடைமுறை பழக்கமாக மாறிவிட்டது. இதனால் என் உடலில் எடை ஒரே சீராக இருக்கும். இரண்டு அல்லது மூன்று கிலோ ஏறி இறங்கும் அவ்வளவுதான்.

சென்ற வாரம் மருத்துவரிடம் சென்ற பொழுது என்னுடைய A1C அளவு 7 ஆக இருந்தது. அது ஆறு மாதத்திற்கு முன்பு 7.5 ஆக இருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு அது 8.2 ஆக இருந்தது. அப்போது மருத்துவர் சொன்னார் உன்னுடைய மாத்திரையின் அளவை அதிகரிக்க வேண்டும். நீ இனிமேல் காலையில் இரண்டும் மாலையில் இரண்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். இப்பொழுது ஒன்று எடுத்துக் கொள்கிறேன். அடுத்த முறை அளவை பாரத்துவிட்டு முடிவு எடுக்கலாம் என்று சொன்னேன். அடுத்த முறை சென்ற பொழுது அது 7.5 ஆக இருந்தது. அதை பார்த்துவிட்டு அவர் அடுத்த முறை அதிகமான இருந்தால் உனக்கு மாத்திரையை அதிகப்படுத்துகிறேன் என்று சொன்னார். சென்ற வாரம் சென்ற பொழுது அதன் அளவு ஏழாக குறைந்து இருந்தும் அவர் உன் மாத்திரையை அதிகப்படுத்த வேண்டும் உன் வயதிற்கு இது அதிகம் என்று சொன்னார். நான் என் அடுத்த முறை பார்க்கலாம் என்று நான் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். அதை நான் 6.5 ஆக குறைக்க திட்டமிட்டு இருக்கிறேன் அதற்கான உணவு கட்டுப்பாடு இந்த நிலா நலத்தின் சுழற்சி அடிப்படையில் நான் மேலும் குறைக்க திட்டமிட்டு இருக்கிறேன். இதில் நான் வெற்றி பெறுவேன் என்று உறுதியாக நினைக்கிறேன். இதைப் போன்று மருத்துவரிடம் என்னால் தைரியமாக சொல்லிவிட்டு வருவதற்கு காரணம் என்னுடைய உணவு முறை திட்டங்கள் தான். இந்த நிலா நலத்தின் உணவு முறையின் மூலம் நான் வெகுவாக பயனடைந்து வருகின்றேன்.

அதேபோல என் மனைவியும் இந்த நிலா நலத்தின் உணவு முறையின் மூலம் பயனடைந்து வருகின்றாள். அவளால் இரண்டு மூன்று மாதத்தில் உடலின் எடையை கணிசமான அளவுக்கு குறைத்து அவளின் உடல் நலத்தை மேம்படுத்தி வருகின்றாள்.

இந்தப் பக்கம் உங்களுக்கானது

இந்தத் திட்டத்தைப் பின்பற்றி நீங்கள் கண்ட மாற்றத்தை எழுதுங்கள். அடுத்த பதிப்பில் அது இடம்பெறும்.

கற்ற பாடங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆனால் எல்லாக் கதைகளிலும் ஒரு பொதுத்தன்மை இருக்கும் — யாரும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவதில்லை. விட்டுவிட்டு மீண்டும் தொடங்கியவர்களே இறுதியில் நிற்கிறார்கள்.

அன்னை தெரசா சொன்னார்: "பெரிய செயல்கள் என்று எதுவும் இல்லை; பெரும் அன்போடு செய்யப்பட்ட சிறு செயல்கள் மட்டுமே உண்டு." உங்கள் உடலுக்கு நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு செயலும் அப்படித்தான்.